Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

No comments :
தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்:

·  ஆகஸ்ட் 15, 2005-அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.
·  இவற்றில் விவசாயத் தொழிலாளர்கள், குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பயனடையும் வகையில் அவர்களது துயரத்தை நீக்கி அவர்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திட “தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்” உருவாக்கப்பட்டது.
·  தமிழகத்தில் வேளாண் தொழில் ஒன்றையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் – 86 இலட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கும், 51இலட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இப்புதிய திட்டம் அமைந்துள்ளது. 
உறுப்பினர்கள்:
·  18 வயது முதல் 65 வயதுடைய விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு/குறு விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
·  ஆண்/பெண் வேறுபாடின்றி இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைகின்றனர்.
·  2001-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களாக பதிவு செய்யப்பட்ட 7.32 இலட்சம் விவசாயத் தொழிலாளர்களும் இப்புதிய திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் பயன்கள்:
·  விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பைப் பெறும் வகையில் அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இத்திட்டத்தின் மூலம் உதவிகள் வழங்கப்படும்.
·  இத்திட்டத்தின் கீழ், உறுப்பினர்களுக்கோ, அவர்களைச் சார்ந்தவர்களுக்கோ தகுதியின் அடிப்படையில் கீழ்க்கண்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
·  விபத்தால் ஏற்படும் மரணம் அல்லது இயற்கையான மரணம் ஆகியவற்றிற்கு இழப்பீடு.
·  திருமண உதவி.
·  குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.
·  மகப்பேறு உதவித் தொகை
·  60-வயதுக்கு பிறகு ஓய்வூதியம்.
·  இவை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு உதவிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசாணை (நிலை) எண் 540, வருவாய்த் (நி.சீ 1(2)) துறை, நாள் 19-09-2005. 
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்படி பயனாளிகளின் தகுதிகள்:
·  சொந்தமாக நிலம் எதுவுமில்லாது, ஊதியத்திற்காக பிறர் நிலத்தில் விவசாயம் / விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு, அத்தொழிலையே பெரிதும் நம்பியுள்ளவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் எனப்படுவர். 
குறு விவசாயி:
·  1.25 ஏக்கர் நன்செய் அல்லது 2.5 ஏக்கர் புன்செய் அல்லது அதற்கும் குறைவாக விவசாயம் செய்கின்ற விவசாயக் குடும்பத்தினர், குறு விவசாயி ஆவார். 
சிறு விவசாயி:
·  2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை அல்லது அதற்கும் குறைவான நிலத்தினை விவசாயம் செய்கின்ற விவசாயக் குடும்பத்தினர். சொந்த நிலமற்ற குத்தகைதாரரும் இத்திட்டத்தில் பயனடைவார்.
·  உறுப்பினர் தகுதி பெற்றிட 18 வயது நிறைந்தவராகவும் 65-வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும்.
·  ஆண்டுக்கு குறைந்தது 6-மாதங்களாவது விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். 
இத்திட்டத்தின் கீழ் சலுகை பெற
·  சிறு/குறு விவசாயி/விவசாய தொழிலாளராகவே இருக்க வேண்டும்.
·  சார்ந்திருப்போர் என்பது சிறு விவசாயி / விவசாய தொழிலாளரின்
·  மனைவி (அ) கணவர்
·  மகன் / மகள்
·  இறந்துவிட்ட மகனுடைய மனைவி(விதவை மருமகள்) குழந்தை மற்றும் பெற்றோர் ஆவர். 
சிறு/குறு விவசாயி/விவசாயத் தொழிலாளர்களைப் பதிவு செய்தல்:
·  குடும்பத்திலுள்ள 18 வயது நிறைவெய்திய ஆனால் 65 வயதுக்குள் உள்ள குறு / சிறு விவசாயி/விவசாயத் தொழிலாளர் இத்திட்டத்தில் உறுப்பினர் ஆவதற்கு, தனது பெயரை கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
·  இத்திட்டத்தில் உறுப்பினர் ஆவதற்கு பதிவுக் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.
·  இந்த பதிவு கட்டணத்தை குறு/சிறு விவசாயி/விவசாயத் தொழிலாளர்கள் சார்பாக அரசே ஏற்கும்.
·  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்கள் தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கென தனியாகக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
·  படிவம்-I: சிறு மற்றும் குறு விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர்கல் இத்திட்டத்தில் உறுப்பினராக இணைவதற்குரிய அனைத்து தகவல்களும் அடங்கிய படிவம் ஆகும். இதனை VAO மூலம் பெற்று பதிவு செய்து உறுப்பினராக ஆக வேண்டும்.
·  படிவம்-II: இத்திட்டத்தில் தகுதி பெற்ற உறுப்பினர்கள் இறக்க நேரிடுகையில், தனது சார்பாக உதவித் தொகையை யார் பெற வேண்டும் என்பதனை உள்ளடக்கிய படிவம் ஆகும்.
·  மேற்கண்ட படிவம் I மற்றும் படிவம் II இரண்டையும் சேர்த்து, குடும்ப அட்டையின் நகலுடன் VAOவிடம் அளிக்க வேண்டும்.
·  படிவம் I மற்றும் படிவம் II குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை சரிபார்த்து, மனுதாரர் உழவுத் தொழிலை சார்ந்த குடும்பமா என களப்பணி மேற்கொண்டு, மனுதாரர் இத்திட்டத்தில் சேருவதற்கு தகுதி பெற்றவரா என்பதனை படிவம் I-இல் பரிந்துரைப் பகுதியில் – VAO பதிவு செய்ய வேண்டும்.
·  வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) – VAO பரிந்துரை செய்த படிவம் I & II-இல் உள்ள மனுதாரர் உறுப்பினர்களின் தகுதி அடிப்படையில் சேர்த்தோ அல்லது நிராகரித்தோ ஆணை பிறப்பிப்பார்.
·  உறுப்பினராக சேர்க்கப்பட்டவரின் குடும்ப அட்டை மற்றும் குடும்பத்தலைவரின் பெயர் கொண்ட பட்டியலை (hard copy and soft copy) மாவட்ட ஆட்சியர்(Collector), நிலச்சீர்திருத்த ஆணையருக்கு அனுப்ப வேண்டும். 
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட அடையாள அட்டை வழங்குதல்:
·  பதிவு பெற்ற உறுப்பினருக்கு அவரது குடும்பத்தினர் குறித்த விபரங்கள் உள்ளடக்கிய அடையாள அட்டை ஒன்று படிவம் III-இல் கண்டவாறு இலவசமாக வழங்கப்படும்.
·  அடையாள அட்டை தொலைந்து போய்விட்டால் வட்டாட்சியர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரூ.10/- செலுத்தி புதிய அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
·  அட்டை விநியோகிக்கும் முன்னர் அட்டையில் குடும்பத் தலைவரின் கையொப்பம் அல்லது இடது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும்.
·  அட்டை வழங்கும் அலுவலரின் வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஒப்பமும் பதியப்பட வேண்டும்.
·  சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் படிவம் IV-இல் கண்டபடி உறுப்பினர் பதிவேட்டினைப் பராமரிக்க வேண்டும். 
உறுப்பினர் தகுதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் (அ) ரத்து செய்தல்:
·  விண்ணப்பப் படிவத்தில் பொய்யான தகவல் கொடுத்திருந்தாலோ அல்லது இத்திட்டத்தின் விதியை மீறியிருந்தாலோ அவற்றை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நிறுத்தி வைக்கலாம்.
·  விசாரணைக்குப் பின்பு உறுப்பினரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பயனாளியின் உறுப்பினர் நியமனத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம். ஆனால் நீக்கம் செய்யும் முன்பு உறுப்பினர் தமது விளக்கத்தை அளிப்பதற்கு உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். 
மேல்முறையீடு:
·  உறுப்பினர் தகுதி ரத்து செய்யப்பட்டவர்கள் ரத்து ஆணை வந்த தேதியிலிருந்து 90-நாள்களுக்குள் கோட்டாட்சியர் அலுவலரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். கோட்டாட்சியர் இந்த மேல் முறையீட்டை விரைந்து முடிப்பார்.
·  உறுப்பினர் தகுதி ரத்து செய்யப்பட்டவர் எந்த சலுகையையும் பெற இயலாது. 
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவிகள்
·  விபத்துக்குள்ளோருக்கான உதவித்தொகை மரணம் – ரூ. 1,00,000 (ஒரு இலட்சம்)
·  மீட்க இயலாத மொத்த இழப்பு-இரு கைகள், இரு கால்கள், இரு கண்பார்வை இழத்தல் – ரூ. 50,000(ஐம்பதாயிரம்)
·  மேலே குறிப்பிடாத வேறு வகையான காயம் ஏற்பட்டு உடல் உறுப்புகளை இழத்தல் – ரூ. 10,000(பத்தாயிரம்)
·  இயற்கையான மரணம் – ரூ. 10,000(பத்தாயிரம்) (குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்படும்)
·  திருமண உதவித் திட்டம் – ஆண்கள் ரூ.3000, பெண்கள் ரூ.5000
·  பெண் உறுப்பினர்களின் மகப்பேறு உதவி திட்டம் – ரூ. 2,000 
கல்விக்கான உதவித்தொகை
·  பதிவு பெற்ற உறுப்பினரின் குடும்பத்திலுள்ள தகுதியுடையவரின் கல்வியை ஊக்குவிக்கவும், மேற்கொண்டு படிக்கவும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மாணவர்
மாணவி
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
ரூ. 1000
ரூ. 1250
12-ஆம் வகுப்பு தேர்ச்சி
ரூ. 1500
ரூ. 1750
தொழிற் பயிற்சி (ITI) பல்தொழில் நுட்ப பயிற்சி (Polytechnic)
ரூ. 1000
ரூ. 1500
பட்டப்படிப்பு இளங்கலை
ரூ. 1500
ரூ. 2000
முதுகலை பட்டப்படிப்பு
ரூ. 2000
ரூ. 2500
சட்டம், பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி (Professional Courses)
ரூ. 2000
ரூ. 2500
முதுநிலை தொழிற்கல்வி
ரூ. 4000
ரூ. 4500
·  விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகையாக ரூ. 1000 அதிகமாக வழங்கப்படுகிறது. 
VAO-வின் கடமைகள்
·  தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கொள்கையை மக்களுக்கு விளக்க வேண்டும்.
·  பயனாளிகளின் தகுதிகளை அறிந்து பதிவு செய்தல்
·  கள விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்கு அறிக்கைகள் அனுப்புதல்
·  படிவம் I, அதிலுள்ள சான்றிதழ், படிவம் II, குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றை சரிபார்த்து படிவம் I-இல் ஒதுக்கப்பட்ட இடத்தில் VAO கையொப்பம் இட வேண்டும்.
·  இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு உதவித் திட்டத்தின் படி (விபத்து, மரணம், கல்வி உதவி, திருமணம், மகப்பேறு உதவித் திட்டம்) முறையான ஆய்வினை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு உதவித் தொகைக் கிடைக்க வட்டாட்சியருக்கு தேவையான உதவிகளை கிராம நிர்வாக அலுவலர் செய்ய வேண்டும்.


No comments :

Post a Comment