Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

நிலமாற்றம்

No comments :
நிலமாற்றம்:

வருவாய் நிலை ஆணை எண் 23
·  இத்திட்டத்தின் கீழ் அரசு புறம்போக்கு நிலங்களை மைய அரசுத் துறைகளுக்கு, வழக்கமான சந்தை மதிப்பினை வசூலித்துக் கொண்டு நிலமாற்றம் செய்யப்படுகிறது.
·  பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற வணிக நோக்கமில்லாத காரணங்களுக்காக நிலக்கிரயமின்றி, நிலமதிப்பு வசூல் மட்டும் செய்து கொண்டு நிலமாற்றம் செய்யப்படுகிறது. 
வருவாய் நிலை ஆணை எண் 24
·  பொது நோக்கங்களுக்காகவும் சமுதாய நலனை முன்னேற்றுவதற்காகவும் அரசு சார்பு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை பல்கலைக்கழகங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு நிலங்களை உரிமை மாற்றம் செய்கின்றன.
·  எந்த நோக்கத்திற்காக நிலமாற்றம் செய்யப்பட்டதோ, அவற்றிற்காக முழுமையாகப் பயன்படுத்தப்படாத பட்சத்தில் அத்தகைய நிலங்கள் மீளப் பெறப்படும்.
·  அதே நேரத்தில் உரிமை நிபந்தனைகள் மீறப்பட்டிருப்பின் எந்தவிதமான இழப்பீட்டுத் தொகையையும் வழங்காமல் நிலங்கள் அரசால் மீளப் பெறப்படும். 
கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்:
·  நிலமாற்றம் நேர்வில், கேட்புத் துறைக்கு நிலம் வழங்குவது குறித்து, கிராமத்தில் தண்டோரா மூலம் கிராம நிர்வாக அலுவலர் விளம்பரம் செய்ய வேண்டும்.
·  பொதுமக்களிடம் ஆட்சேபணை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
·  மேலும் நிலத்தின் சந்தை மதிப்பினை நிர்ணயம் செய்ய அக்கம் பக்கத்திலுள்ள நிலங்களின் உண்மை மதிப்பினை தெரிவிக்க வேண்டும்.


No comments :

Post a Comment