Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

விபத்து நிவாரணத் திட்டம்

No comments :
விபத்து நிவாரணத் திட்டம்:
·  அரசாணை (நிலை) எண் 471, நிதித்துறை, நாள் 23-05-1989-இன் படி தமிழ்நாட்டில் கிராமக் கைவினைஞர்கள் உட்பட 44 வகையான தொழிலில் போது இறக்க நேரிட்டாலோ (அ) காயம் ஏற்பட்டாலோ (அ) அங்கங்களை இழக்க நேரிட்டாலோ அவர்களது குடும்பங்களுக்கும், காயமடைந்த (அ) அங்கங்களை இழந்த தொழிலாளர்களுக்கும் வருவாய்த் துறை மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் அளிக்கப்படும் நிவாரணத் தொகை
·  இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, விபத்தினால் இறந்த (அ) முழுமையாக செயலிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை ரூ. 10,000 வழங்கப்பட்டு வந்தது.
·  28-08-1996 முதல் ரூ. 15,000-ஆக வழங்கப்பட்டு வருகிறது. 
விபத்தினால் காயம் ஏற்படுதல் (அ) அங்கங்களை இழத்தல் ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் நிவாரணத் தொகை
·  விபத்தினால் ஏற்படும் காயங்களின் தன்மைக்கேற்ப, ரூ. 5000 முதல் ரூ. 10,000 வரை நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வந்தது.
·  தற்போது அரசாணை (நிலை) எண் 570, வருவாய்த்துறை, நாள் 27-10-1999-இன் படி காயத்தின் தன்மைக்கும், இழக்க நேரிட்ட உடல் உறுப்புகளின் தன்மையைப் பொறுத்தும் ரூ.7000 முதல் ரூ. 15,000 வரை நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. 
VAO-வின் கடமைகள்
·  மனுதாரர் கிராமத்தில் குடியிருப்பவரா?
·  அரசு வெளியிட்டுள்ள 44 வகையான தொழிலாளர்களின் பட்டியலில் அடங்குபவரா?
·  இறப்புச் சான்றும், முதல் தகவல் அறிக்கையின் நகலும் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதா?
·  மனு, இறப்பு நாளிருந்து ஆறு மாதத்திற்குள் பெறப்பட்டுள்ளதா?
·  கிராமப் பொதுமக்கல் மற்றும் கிராம முக்கியஸ்தர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற வேண்டும்.
·  மனுதாரரிடம் நேரடி விசாரணை, வாக்குமூலம் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பம் பெற வேண்டும்.
·  பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காயமடைந்தவர்கள் (அ) அங்கங்களை இழந்தவர்களின் மருத்துவச் சான்றுகள் ஆகியவற்றை பரிசீலனை செய்ய வேண்டும்.
·  விபத்து அல்லது மரணம் எங்கே, எப்படி, எந்த நாளில், எந்த நேரத்தில் நடந்தது பற்றிய விபரங்களை பரிசீலனை செய்ய வேண்டும்.
·  நிவாரணத் தொகை வழங்கும் போது சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியருக்கு பயனாளியை அடையாளம் காண்பித்து ‘என்னால் அடையாளம் காண்பிக்கப்பட்டது’ என்று சான்றளிக்க வேண்டும். 

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்
·  தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை எளிய மக்களுக்கும் ஏ.ஏ.ஒய் அட்டைதாரர்களும் பொங்கல் பண்டிகை தோறும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
·  இத்திட்டத்தின் கீழ் கிராம நிர்வாக அலுவலர் தலைமையிலான மூவர் கொண்ட குழுவின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் நியாயவிலைக் கடைகள் மூலமாக பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
·  எவ்வித புகார்களுமின்றி இத்திட்டத்தை செவ்வனே செய்ய வேண்டியது கிராம நிர்வாக அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் ஆகும். 
பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் போது VAO கவனத்தில் கொள்ள வேண்டியவை:
·  வட்டாட்சியரால் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலவச வேட்டி, சேலைகளை கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்
·  அந்தந்த கிராமத்திலுள்ள வட்டாட்சியரால் வழங்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலை தங்களது எல்லைக்குட்பட்ட நியாயவிலைக் கடைகளில் உள்ள பட்டியலுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பின், பயனாளிகளின் பட்டியலை நியாயவிலைக் கடைகள், சாவடி, ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றின் முன்பு ஒட்ட வேண்டும்.
·  பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படும் நாள்களுக்கு முன்பே, ஒவ்வொரு நாளும் விநியோகம் செய்யப்படும் நபர்கள் பற்றிய எண்ணிக்கையை பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம், (அ) ஒலி பெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும்.
·  விநியோகத்தன்று நியாயவிலைக் கடை முன்பாக பயனாளிகல் ஒழுங்கான முறையில் வேட்டி, சேலைகளைப் பெற்றுக் கொண்டு கூட்ட நெரிசலில் சிக்காமல் வெளியேறும் வகையில் ஏற்படுத்த வேண்டும். வரிசையில் நிற்கும் பயனாளிகளின் எண்ணிக்கை 100-க்கும் மேற்படாமல் இருக்க வேண்டும்.
·  கிராம நிர்வாக அலுவலர்கல் விநியோகத்தின் போது பயனாளிகளை சரியானபடி அடையாளம் தெரிந்து கொண்டு மெய்த்தன்மையை உறுதி செய்து பின்னர் விநியோகம் செய்ய வேண்டும்.
·  இலவச வேட்டி, சேலை வழங்குதலுக்கான டோக்கன்கள் மற்றும் ரப்பர் ஸ்டாம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


No comments :

Post a Comment