Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

குடிவாராச் சட்டங்கள்

No comments :
குடிவாராச் சட்டங்கள்:

·  இரயத்துவாரி பிரிவினர் என்பவர் அரசு நிலங்களை விவசாயம் செய்து அவற்றிற்கான வரியை நேரடியாக கட்டி இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் உரிமையை அனுபவிப்பதே ஆகும். 
1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு பயிரிடும் குத்தகைத்தாரர் பாதுகாப்புச் சட்டம்: (தமிழ்நாடு சட்டம் 22/55)
·  இச்சட்டம் குத்தகைத்தாரர்கள், குத்தகைத் தொகையை செலுத்தாமலிருப்பது மற்றும் பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது போன்ற காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக குத்தகைத்தாரர்களை அவர்கள் சாகுபடி செய்யும் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதை தடுப்பதற்கு இச்சட்டம் உதவி செய்கிறது. 
1956-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சாகுபடி குத்தகைதாரர்கள் (நியாய குத்தகை செலுத்துதல் சட்டம்).
·  இச்சட்டத்தின் படி சாகுபடி குத்தகைத்தாரர்கள் நில சொந்தக்காரர்களுக்கு மொத்த விளைச்சலில் 25% குத்தகையை செலுத்த இச்சட்டம் வழிவகுக்கிறது. 
1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நம்பகங்க்ள்(Public Trust)(வேளாண்மை நிலங்களின் நிர்வாகம் (ம) ஒழுங்குபடுத்துதல்) சட்டம்.(தமிழ்நாடு சட்டம் 57\61)
·  நம்பகங்கள்(Trust) தங்களுடைய சொந்த சாகுபடிக்கு 20 தர ஏக்கர் நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதற்கு மேல் உள்ள நிலத்தை கட்டாயமாக பிறருக்கு குத்தகைக்கு விடவும் வகை செய்யப்பட்டுள்ளது. 
1969-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்ம நிலங்கள்(குத்தகை உரிமைகள் ஆவணம்)
·  இச்சட்ட்த்தின் கீழ் வட்டாட்சியர், ஆணைக்கு எதிராகத் தொடரப்படும் வழக்கு மனுக்களை விசாரணை செய்து துணை ஆட்சியர் நிலையில் மேல்முறையீடு அதிகாரிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்
·  குத்தகைதாரராக பதிவு செய்வதற்கான கோரிக்கைகள் வரப்பெற்றதும்/பட்டாதாரர்களையும் மனுதாரரையும் விசாரணை செய்தும் தக்க ஆதாரங்களுடன் சாட்சிகளைப் பரிசீலனை செய்து கிராம நிர்வாக அலுவலரை விசாரணை செய்தும், இறுதியான உத்தரவை வட்டாட்சியர் வழங்குவார்.
·  குத்தகைதாரர் பதிவேடு ஒன்றை கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்க வேண்டும, அடங்கலில் கலம் 7-இல் சிவப்பு மையால் குத்தகைதாரர் பெயர், குத்தகை தொகை ஆகிய விவரங்களை கிராம நிர்வாக அலுவலர் பதிய வேண்டும். 
கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்
·  கிராமத்தில் பதிவு பெற்ற குத்தகைதாரர் மற்றும் பதிவு பெறாத குத்தகைதாரர் குறித்து அனைத்து விவரங்களையும் கிராம நிர்வாக அலுவலர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
·  குத்தகைத்தாரர்கள் யார் என்று அடையாளம் காட்டும் பணி கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்பாகும்.
·  உண்மையான குத்தகைதாரர்கள் பெயர்கள் பதிவாகாமல் இருந்தால், இது சம்மந்தமாக முழு விபரங்களை கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு வழங்க வேண்டும்.


No comments :

Post a Comment