Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

புதையல்

No comments :
புதையல்:

·  ‘புதையல்’ என்பது பூமியில் மறைந்திருக்கும் பொருள். புதையல் பொருள்களை எவ்வாறு கையாண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது இந்திய புதைபொருள் சட்டம் 1878 மற்றும் வருவாய் நிலை ஆணை எண் 197-இன் கீழும் வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன. 
புதையல் கண்டெடுப்பு தொடர்பாக VAO-வின் கடமைகளும் பொறுப்புகளும்
·  புதையல் கண்டெடுக்கப்பட்டது தெரிந்தவுடன் புதையலைக் கைப்பற்றி வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பி, கைப்பற்றப்பட்ட புதையலையும் ஒப்படைக்க வேண்டும்.
·  புதையலைக் கண்டெடுத்தவர்கள் புதையலை மறைத்து, அதனின் மெய்த்தன்மையை மாற்ற நடவடிக்கைகள் எடுத்தால், அவ்விபரம் தெரிய வந்தவுடன் காவல்துறையினரின் முயற்சியுடன் அதனைத் தடுத்து நிறுத்தி பொருள்களை மீட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். (மெய்த்தன்மையை மாற்றுதல் – தங்கச் சிலைகள், கலசங்கள், பொற்காசுகள், வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை இரகசியமாக பொன்வேலை செய்வோரின் துணையுடன் உருக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்) 
வட்டாட்சியருக்கு VAO – அனுப்ப வேண்டிய தகவல்கள்
·  புதையல் கண்டெடுத்தவர் பெயர் மற்றும் முகவரி
·  கண்டெடுத்த நாள், நேரம் மற்றும் எம்முறையில் புதையல் கண்டெடுக்கப்பட்டது
·  புதையல் கண்டெடுக்கப்பட்ட கிராமம், புல எண், புதையல் கண்டெடுக்கப்பட்ட போது உடனிருந்த நபர்கள் பற்றிய விபரங்கள்
·  புதையலின் தன்மை : - தங்கம், வெள்ளி, உலோகம், ஐம்பொன் சிலைகள் நாணயம், வரலாற்றுச் சின்னங்கள், சிலைகள், கல்வெட்டுகள் மற்றும் கலைநுட்பம் வாய்ந்த பொருள்கள்.
·  ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்படும் பூசைக்குரிய அல்லது பூசைக்கு தேவையில்லாத சிலைகள் மற்றும் பூசைப்பொருட்களை கையகப்படுத்தும் போது மிகவும் கவனத்துடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு உடன் வட்டாட்சியருக்குத் தகவல் அளிக்க வேண்டும். 
சட்டம் ஒழுங்கைப் பராமரித்தலில் VAO-வின் இதரப் பணிகள்
·  புதைக்கப்பட்ட உடல் சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைக்குத் தோண்டி எடுக்கும் போது வட்டாட்சியரோடு உடனிருந்து உதவுதல்.
·  மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிகளில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பது.
·  கொடிய காட்டு விலங்குகள் கிராமத்திற்குள் புகுந்துவிட்டால் வனத்துறை, வட்டாட்சியர் மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளித்தல்.
·  தேர்தல் பணிகளில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் போது முழு ஒத்துழைப்புத் தருவது.
·  மின்சாரக் கருவிகள் மற்றும் மின்சாரக் கசிவு போன்றவற்றினால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையை அறிய வந்தால் உடனடியாக மின்சாரத்துறைக்கும் அறிவித்தல்
·  கிராம எல்லைக்குட்பட்ட இருப்புப் பாதைகளில் பிரச்சனைகள் ஏற்படும் போது இரயில்வே துறையினருக்கு உதவுதல்.
·  விபத்துகள் ஏற்பட்டால் வட்டாட்சியர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோருக்குத் துரிதமாக தகவல் அனுப்ப வேண்டும்.
·  வெடிபொருட்கள் சட்டம் (Explosives Act) மற்றும் ஆயுதச் சட்டம் (Arms Act) ஆகியவற்றின் கீழ் உரிமம் பெற்றவர்கள், தங்களுடைய உரிமங்களைப் புதுப்பித்துள்ளார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். உரிமம் பெற்றவர்கள் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டால் வட்டாட்சியருக்கும் காவல்துறையினருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.


No comments :

Post a Comment