Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

பேரிடர் மேலாண்மை – முன்னெச்சரிக்கை மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகள்

No comments :
பேரிடர் மேலாண்மை – முன்னெச்சரிக்கை மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகள்:

பேரிடர் மேலாண்மை:
·  இன்றைய சமுதாயம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அபாயங்கல் இயற்கை மற்றும் மனிதன் உருவாக்கி வருகின்ற பேரிடர்கள் ஆகும். 
பேரிடர்களின் வகைகள்
·  புயல்
·  வெள்ளம்
·  நிலநடுக்கம்
·  வறட்சி
·  சுனாமி (ஆழிப்பேரலை) 26-12-2004
·  நிலச்சரிவு
·  தீ விபத்து
·  சூறாவளி
·  பனிப்புயல்
·  வெடிவிபத்து
·  இரசாயன மற்றும் தொழிற்சாலைப் பேரிடர்கள்
·  விபத்துகள்
·  தீவிரவாத தாக்குதலினால் உண்டாகும் உயிர்ச் சேதம் மற்றும் பொருட்சேதம்
·  தொற்று நோய் 
பேரிடர்களின் தாக்கங்கள் :
·  இயற்கை சீற்றத்தால் உருவாகிற பேரிடர்கள், மனிதனால் உருவாக்கப்படுகின்ர பேரிடர்கல் மற்றும் அணு / இரசாயனப் போர்களின் விளைவாக உருவாகின்ற பேரிடர்கள்.
·  உயிர்ச்சேதம்
·  பொருட்சேதம்
·  குடியிருப்புகளுக்குச் சேதம்
·  கால்நடைகள் மற்றும் இதர உயிர்வாழ் பிராணிகளின் உயிர்ச்சேதம்
·  கட்டடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் நீர் நிலைகளுக்கு சேதம்
·  சுகாதாரக் கேடு
·  சுற்றுப்புறச் சூழ்நிலைப் பாதிப்பு
·  நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் பாதிப்பு
·  மக்களின் பொது அமைதிக்குப் பாதிப்பு
·  அடிப்படைத் தேவைகளுக்குக் கடுமையான சேதம்
·  சாதாரண வாழ்க்கை ஸ்தம்பித்தல்
·  பேரிடர் தாக்கத்தைத் கையாள்வதற்கு அதிக அளவிலான மனித சக்தி மற்றும் பொருள் ஆதாரங்களை ஒன்று திரட்டல்.
·  அணு / இரசாயனப் போர்கள் போன்று உலகின் வளர்ந்து வருகின்ற உயிரியல் தீவிரவாதம் பல வடிவங்களில் மனித குலத்தைச் சமீப காலத்தில் பெரிதும் தாக்கியுள்ளது. இதனின் தாக்கங்கள் இன்னும் உலகின் பல்வேறு நாடுகளிலும் நம் நாட்டிலும் பெருகிக் கொண்டே வருகின்றன. மனிதனால் உருவாக்கப்படும் சாதி, மதக் கலவரங்களும் மனித குலத்தை பேரழிவுக்கு கொண்டு செல்கிறது. 
பேரிடர் மேலாண்மையில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கும், கடமைகளும் மற்றும் பொறுப்புகளும்:
·  வருவாய்த்துறையின் அடித்தளமாகக் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.
·  கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அரசின் பிரதிநிதியாகவும் நிறைவேற்றும் பணிகளில் ஈடுபடுகின்றார்.
·  பேரிடர் மேலாண்மையில் கிராம மக்களுடன் அலுவலரின் மிக முக்கியப் பணிகளில் ஒன்றாகும்,
·  கிராம நிர்வாக அலுவலர்கள் நமது மாநிலத்தில் ஏற்படுகின்ற அற பேரிடர்கள் பற்றியும், நிவாரணப் பணிகள் பற்றியும் தெரிந்துகொள்வது மிக அவசியம். 
பெரிய அளவிலான இயற்கைப் பேரிடர்கள்
·  பெரும் வெள்ளம்
·  ஆழிப் பேரவை (சுனாமி)
·  கடும் வறட்சி
·  நிலநடுக்கம்
·  சூறாவளிப் புயல் 
சிறிய அளவிலான இயற்கைப் பேரிடர்கள்
·  பனிப்புயல்
·  பனிப்பொழிவு
·  இடி, மின்னல்
·  நிலச்சரிவு
·  புயல்காற்று 
பெரிய அளவிலான செயற்கைப் பேரிடர்கள்
·  தீ விபத்து
·  வெடி விபத்து
·  இராசயன வெடி
·  தீவிரவாதத் தாக்குதல்
·  தொற்று நோய் 
சிறிய அளவிலானச் செயற்கைப் பேரிடர்கள்
·  சாலை, ரயில், விமான விபத்துகள்
·  விழாக்களில் ஏற்படும் விபத்துகள்
·  தொழிற்சாலை விபத்துகள்
·  விஷம் கலந்த உணவு, சாராயம் 
பேரிடர் மேலாண்மைக் குழுக்கள்
·  மாநிலம் – மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு
·  மாவட்டம் – மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு
·  ஊராட்சி ஒன்றியம் – ஊராட்சி ஒன்றிய மேலாண்மைக் குழு
·  கிராம ஊராட்சி – ஊராட்சி மேலாண்மைக் குழு 
ஒவ்வொரு வகையான பேரிடர்களிலும் கிராம நிர்வாக அலுவலருக்குண்டான பொறுப்புகள் / கடமைகள்.
·  கிராம நிர்வாக அலுவலர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையெடுத்தல், தாக்குதல் நடந்த பின் அது குறித்து மேல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தல்
·  பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு நடவடிக்கை எடுத்தல்
·  நிவாரண நடவடிக்கைகள் எடுத்தல், புனர் வாழ்வு அளிக்க ஏற்பாடுகள் செய்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும். 
கிராம நிர்வாக அலுவலர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெள்ளம்
·  வானிலை ஆராய்ச்சி மையத்தால், வட்டாட்சியர் அலுவலகத்தால் புயல் எச்சரிக்கை தகவல் வரப்பெற்றவுடன் கிராமங்களிலுள்ள நீர்த் தேக்கங்கள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் ஏதேனும் உடைப்பு உள்ளதா எனக் கண்டறிந்து சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
·  மீட்பு, பாதுகாப்பு, நிவாரணம் ஆகிய பணிகளில் தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரின் உதவியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
·  மீட்புப்பணியில் கிராம மக்கள் தன்னார்வத்துடன் ஈடுபட விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கிராம மக்களிடையே பேரிடர் நேரும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிர்சி முகாம் நடத்துதல்
·  மணல் மூட்டைகள், சவுக்குக் கட்டைகள், போதிய வேலையாட்கள், நீச்சல் தெரிந்தோர் என்று அனைத்து நிலையிலும் தயாராக இருக்க வேண்டும்.
·  மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
·  புயல் பாதுகாப்பு மையங்கள் தவிர, கல்விக் கூடங்கள், கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், மக்களை பாதுகாப்பான, இடங்களுக்குக் கொண்டு செல்ல வாகன வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
·  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வசதிகளை உடனுக்குடன் வழங்க பொதுக்கூட்டங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவுக் கூடங்கள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 
வறட்சி
·  வறட்சியின் போது பயிர் சேதக் கணக்கெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. எனவே பயிர் சாகுபடி பதிவுகள் மற்றும் விளைச்சல் மதிப்பீட்டு சதவீதங்கள் கிராம நிர்வாகா அலுவலரால் முன்னெச்சரிக்கையாகப் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வறட்சி நிவாரணத்திற்கான சேத மதிப்பீடுகளைக் கணக்கிடுவதிலும் நிவாரணத் தொகை வழங்குவதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். 
நிலச்சரிவு
·  நிலச்சரிவு என்பது பெரிய வகையான இடர்பாடுகளில் ஒன்று. இது பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்படுகிறது.
·  மலைப்பகுதியிலுள்ள மரங்களை வெட்டுதல், அரசு புறம்போக்கு நிலங்களில் மணல்களை வெட்டி பூமியைச் சேதப்படுத்துதல் போன்றவற்றைக் கண்காணித்து கிராம நிர்வாக அலுவலர்கள், உடனுக்குடன் வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் நிலப் பரப்பின் தன்மையை பாதுகாக்க கிராம நிர்வாக அலுவலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். 
தீ விபத்து
·  முதலிலே தீயணைப்புத் துறைக்கும், அடுத்ததாக காவல்துறை, வட்டாட்சியர் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிர்ச்சேதம் ஏற்படா வண்ணம் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
·  தீ விபத்து ஏற்பட்டவுடன் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
·  மேலும் தீ பரவுவதற்கு முன் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பைக் துண்டிக்க வேண்டும். 
ஆழிப்பேரலை(சுனாமி) :
·  கடற்கரையோரம் உள்ள மக்களை அங்கிருந்து அவர்களுடைய உடைமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்து உணவு, தங்கும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
·  எந்தப் பகுதியில் ஏற்கனவே தாக்குதல் நடைபெற்றது, மீண்டும் எந்தப் பகுதியில் தாக்குதல் நடைபெறலாம் என்ற விவரங்களை உள்ளடக்கிய ஒரு வரைபடமும் தயாரிக்க வேண்டும்.
·  நில நடுக்கம்
·  நிலநடுக்கங்கள் நேரிடையாக மனிதனைக் கொல்வதில்லை. ஆனால் பாதுகாப்பற்ற கட்டடங்கள் மனிதனைக் கொல்கிறது என்பதே நம் அனுபவத்தில் கண்ட உண்மை. நிலநடுக்கம் எவ்வித முன்னெச்சரிக்கையையும் தருவதில்லை. 
தடுப்பு நடவடிக்கைகள்
·  நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளை ஏற்கனவே அரசு கண்டறிந்துள்ளது.
·  அப்பகுதி மக்களுக்கு நிலநடுக்கத்திற்கு முன்பு செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதன் பின் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்துக் கூற வேண்டும்.
·  நிலநடுக்கத்தில் காரணமாக சேதமடைந்த கட்டடங்கள், மின் அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்றுவதற்கு மற்ற துறை அலுவலர்களுடன் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பணிபுரிய வேண்டும்.
·  நிலநடுக்கத்தால் அதிகமாக காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். 
நிவாரணப் பணிகள்
·  வெள்ளம், புயல், தீ விபத்து போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருவூல விதி 27-இன் கீழ் உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
·  உயிரிழந்த நபர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு - ரூ.1200
·  முழுமையாகப் பாதிக்கப்பட்ட குடிசை ஒன்றுக்கு – ரூ. 2000
·  பகுதியாகப் பாதிக்கப்பட்ட குடிசை ஓன்றுக்கு – ரூ. 1000
·  பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பம் ஒன்றுக்கு – ஒரு வேட்டி, ஒரு சேலை,5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய்
·  இறந்த கால்நடைகள் ஒன்றூக்கு - ரூ. 5000
·  இறந்த கன்று ஒன்று - ரூ. 3000
·  செம்மறியாடு / வெள்ளாடு – ரூ. 1000 
வெள்ளம் / புயல் / வறட்சியால் பாதிக்கப்பட்ட பல்வகை பயிர்களுக்கான நிவாராம்
·  மழையை நம்பி பயிர் செய்யப்படும் பகுதிகள் 1 ஹெக்டருக்கு – ரூ. 1000
·  உறுதியளிக்கப்பட்ட பாசன வசதியுள்ள பகுதிகள் 1 ஹெக்டருக்கு – ரூ. 2500
·  ஆண்டு முழுவதும் உள்ள பயிர்கள் 1 ஹெக்டருக்கு - ரூ. 4000
·  முசுக்கோட்டை மரம் 1 ஹெக்டருக்கு – ரூ.1500
·  மேற்கண்டவை அனைத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கான பயிர் இழப்பிற்கான நிவாரணத் தொகையாகும். இதனுடன் அவர்களுக்கு, மான்யம் 50 சதவீதமும் வழங்கப்படுகிறது.
·  மற்ற விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1000 வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மட்டும் நிவாரண நிதி வழங்கப்படுக்கிறது 
சிறப்பு நிவாரண நிதிகள்
·  முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 50,000 உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே நிவாரண நிதி ரூ. 15000 வழங்கப்பட்டிருந்தால், மீதியுள்ள தொகை மட்டுமே வழங்கப்படும்.
·  பாரதப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 50000 வழங்கப்படுகிறது. 
கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்
·  பேரிடர்களால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான நிவாரணங்கள் அனைத்தும் கிராம நிர்வாக அலுவலர்களைக் கொண்டே நிறைவேற்றப்படுகின்றன. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகப் பயன்பெற கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
·  நிவாரணம் பெறும் பயனாளிகளின் பட்டியலைத் தயார் செய்யும் போது உண்மைத் தன்மை / சேதத் தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
·  பயனாளிகளுக்கு எந்த விநியோக மையத்தில் எந்தத் தேதியில் நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதையும் எந்தெந்த ஆதாரங்களுடன்(குடும்ப அட்டை போன்றவை) வரவேண்டும் என்பதையும் தண்டோரர்கள் மூலம் அற்விக்க வேண்டும்.
·  முன்கூட்டியே பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்பத்த காவல்துறையினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
·  நிவாரணங்கள் வழங்கப்படும் போது வெளியாட்கள், சமூக விரோதிகளின் ஊடுருவல் மற்றும் தலையீடுகளை தவிர்க்க வேண்டும்
·  நிவாரணங்களை பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக அவர்களிடமிருந்து கையொப்பம் பெற வேண்டும்.
·  ஒப்புமைச் சீட்டின் இறுதியில் VAO – “என்னால் பயனாளியின் அடையாளம் காட்டப்பட்டு நிவாரணம் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது” என்ற சான்றினை எழுதி கையொப்பம் இட வேண்டும்.
·  பாரதப் பிரதமர் நிவாரணத் தொகை பெற முயற்சிக்கும் பயனாளிகளுக்காக அனுப்பப்படும் அறிக்கைகளில் பிரதேசப் பரிசோதனை , முதல் தகவல் அறிக்கை, வாரிசுதாராரின் வங்கி சேமிப்பு கணக்கு எண் மற்றும் வங்கியின் பெயர், இடம் போன்ற விபரங்கள் இருக்க வேண்டும். காலதாமதமான அறிக்கைகள் பாரதப் பிரதமர் அலுவலகத்தில் ஏற்க முடியாமல் போய்விட நேரிடும். ஆகவே இவ்வினத்தில் உடனடி நடவடிக்கைகளை கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.


No comments :

Post a Comment