Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

கொலை, தற்கொலை, அசாதாரண மரணம் நிகழும் போது கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

No comments :
கொலை, தற்கொலை, அசாதாரண மரணம் நிகழும் போது கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

·  மேற்கண்ட சம்பவம் நிகழும் போது, சம்பவத்தைத் தெரிவத்த தகவலாளரிடம் எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டும் பிரேதத்தின் தன்மை குறித்து காவல்துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
·  குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர் மரன விசாரணை மேற்கொள்ளக் கூடாது.
·  கொலை, தற்கொலை, அசாதாரண மரணம் ஏற்படும் நிகழ்வில் காவல்துறையினர் குற்றவியல் செயல் நடுவருக்குத் (Exective Magistrates) தகவல் தெரிவிப்பார். அவர் குற்றவியல் நடவடிக்கை சட்டம்
·  பிரிவுகள் 174 மற்றும் 176-இன் படி பிரேத விசாரணை மேற்கொள்வார்.
·  குற்றவியல் செயல் நடுவர் விசாரணையின் பொது கிராம நிர்வாக அலுவலர் உடனிருந்து ஏற்பாடுகளும் உதவிகளு செய்தல் வேண்டும். 
கொலை, அசாதாரண மரணம் நிகழும் போது;
கொலை:
·  உள்நோக்கத்திற்காக அல்லது ஆதாயத்திற்காக கொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் கொலை செய்யப்படுவதற்கு இ.பி.கோ-302-இன்படி விசாரணை மேற்கொள்வார். 
அசாதாரண மரணம்:
·  கொலை செய்யப்படாமல் – வேறு வழிகளில்,
·  சாலை விபத்து
·  மின்சாரம் தாக்கி இறப்பு
·  சுவர் விழுந்து இறப்பு
·  விலங்குகளால் ஏற்படும் இழப்பு
·  போன்ற அசாதாரண மரணத்தின் போது இ.பி.கோ-304-இன்படி விசாரணை மேற்கொள்வார்
தூக்கினால் ஏற்படும் மரணம்:
·  கிராம நிர்வாக அலுவலர் – தம் அறிக்கையை காவல்துறையினருக்கு அளிக்கும் போது கவனிக்க வேண்டியவைகள்.
·  தூக்குக்கயிறு கழுத்தைச் சுற்றிலும் இருக்கிறதா அல்லது கோணலாகவும் நேராகவும் இருக்கிறதா?
·  கட்டுக் கயிறாக இருக்குமானால், முனையில் அறுக்கப்பட்டிருக்கிறதா?
·  கட்டின் வடிவு கால்வாய் போல் அமைந்திருக்கிறதா?
·  கட்டு முடிச்சு, வலது கை வழக்கமுடையவரால் போடப்பட்டதா அல்லது இடது கை வழக்கமுடையவரால் போடப்பட்டதா?
·  கண்கள் வெளியே வந்திருக்கிறதா, கண்மணி விழுந்திருக்கிறதா?
·  நாக்கு எப்படி இருக்கிறது?
·  தலைமுடி அவிழ்ந்திருக்கிறதா?
·  உடைகள் கிழிந்திருக்கின்றனவா?
·  அறை உட்புறத்திக் பூட்டப்பட்டிருக்கிறதா? அறையின் நீளம், அகலம், உயரம் அளவு என்ன?
·  போன்ற சாதாரணமாகக் கண்களுக்குப் புலப்படுகின்ற வெளிப்புறமாகத் தெரிகின்ற விவரங்களை சேகரித்து
·  காவல்துறையினருக்கு மகஜர் (அறிக்கை) தயார் செய்து அளிக்க வேண்டும். 
மகஜர் (அறிக்கை) தயார் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்:
·  கௌரவமுள்ள மூன்று கிராம முக்கியஸ்தர்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.
·  இதற்கான நமூனாவில் (முறைப்படி) மகஜர் தயார் செய்ய வேண்டும்.
·  மூன்று பிரதிகள் மகஜர் தயார் செய்து ஒன்று வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். மற்றொன்று எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்திற்கும், கடைசி பிரதியை தமக்கும் வைத்துக்கொள்ள வேண்டும் 
கிராமத்தில் ஏற்படும் சமூக விரோதச் செயல்கள் குறித்து அறிக்கை அனுப்புதல்
·  நிலவரி வசூல் மற்றும் அரசுப்பணியில் இடையூற் ஏற்பட்டால் காவல்துறையின் – உதவியுடன் செயல்படலாம்.
·  கிராம எல்லைக்குள் அசம்பாவித மரணம், கொள்ளை, சந்தேக மரணம் போன்ற நிகழ்வுகளை அறிந்தவுடன் தம் எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பொறுப்பு அலுவலருக்கும் தகவல் அளிக்க வேண்டும்.
·  சந்தேகத்திற்கிடமான அந்நியர் நடமாட்டம் மற்றும் கீழ்க்கண்ட சம்பவங்கள் பற்றி வட்டாட்சியருக்கும், காவல்துறையினருக்கும் தகவலறிக்கை அனுப்ப வேண்டும்.
·  கிரிமினல் குற்றம்
·  தற்செயலாக ஏற்படும் மரணம்.
·  தற்கொலை.
·  தீ விபத்து பற்றிய சம்பவங்கள்.
·  கே.டி. ரிஜிஸ்டரில் (Known Depreadator Regiser) உள்ள நபர்களின் நடமாட்டம்.
·  தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம்.
·  இனக் கலவரங்கள், சாதிக் கலவரங்கள்.
·  கள்ளச் சாராயம் காய்ச்சுதல், போதைப் பொருள் நடமாட்டம் போன்றவை.
·  கிராமத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக இறந்தாலோ.
·  கிராமத்தின் பொது அமைதிக்கு பாதகம் விளைவிக்கும் இடையூறுகள் செய்யப்பட்டாலோ.
·  ஆயுதத்தினால் ஏற்படும் பிரச்சனைகள்.
·  அரசின் பொதுச் சொத்திற்கு சேதம் விளைவிக்கும் நோக்குடன் தெரிய வருகின்ற செயல்பாடுகள்.
·  ஆடு, மாடு போன்ற கால்நடைகள் திருட்டு.
·  சாலை மற்றும் இதர விபத்துகள்.
·  ஆட்கடத்தல் குற்றங்கள்.
·  குழந்தையைத் தொழிற்சாலை வேலையில் ஈடுபடுத்துதல்.
·  கொத்தடிமைகளை மீட்பு செய்தல்
·  குழந்தைகளை திருடுதல்.
·  பொது இடங்களில் மது அருந்துதல், சூதாட்டம் மேற்கொள்ளல்.
·  கிணறு, ஏரி, குளம், ஆறுகளில் கேட்பாரின்றி கிடக்கும் பிணங்கள்
·  போன்ற சூழ்நிலைகளில் கிராம நிர்வாக அலுவலர் காவல்துறைக்குத் தகவல் அறிக்கை அனுப்ப வேண்டும். சமூகக் கலவரங்கள், சாதிக் கலவரங்கள் போன்ற பணிகளில் எந்தவொரு பிரிவினருக்கும் அனுசரணையாக இல்லாமல் நடுநிலையுடன் பணிபுரிவது கிராம நிர்வாக அலுவலரின் தலையாய கடமையாகும்.


No comments :

Post a Comment