Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்

No comments :
பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்:

·  அரசாங்க பாசன ஆதாரங்களின் மூலம் பாசன வசதி பெறக் கூடிய நிலங்கள் நன்செய்யாகவும், மற்ற நிலங்கள் புன்செய் மற்றும் மானாவாரி நிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 
நன்செய், புன்செய் மற்றும் மானாவாரி கைப்பற்று நிலங்கள்:
·  பெரும்பாலான புன்செய் நிலங்களாக வகைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலங்கள் தனியார் கிணறுகளிருந்து பாசன வசதி பெற்றவையாகும். ஏரி உள்வாய் பகுதியில் நீர் பிடிப்புக்கு உட்படாத நிலங்களாக மானாவாரி நிலங்கள் அமைந்துள்ளன. மானாவாரி நிலங்கள் புன்செய் நிலங்களை விட சிறிது மேம்பட்டிருக்கும். ஏரி உள்வாய் பகுதியில் அமைந்துள்ளதாலும் இந்நிலங்கள் ஈரத் தன்மைக் கொண்டதாக இருப்பதாலும் நன்செய் பயிர்கள் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும். 
(ஆ) தீர்வை ஏற்பட்ட தரிசு:
·  இது தவிர சில நிலங்கள் தீர்வை விதிக்கப்பட்டிருந்தும் நிலவரி திட்டத்தின் போது உரிமைக் கொண்டாடாத நிலையில் அதனை தீர்வை ஏற்பட்ட தரிசுகளாக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நிலங்கள் சில மாவட்டங்களில் “அனாதீனம்” என்றும் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது
மண்ணும் நிலமும்
·  நிலவரித் திட்டத்தின் போது மண்ணின் சேர்க்கை அமைப்பை அனுசரித்தும் நிலங்களின் மண் வளங்களை அனுசரித்தும் நிலங்களைக் குறிப்பாக சில வகையில் பாகுபாடுகள் செய்கின்றனர். மேலும் அந்நிலங்கள் இருக்கும் இடத்தை அனுசரித்தும் நீர்ப்பாசன ஆதாரங்கள் தன்மையை அனுசரித்தும் நன்செய் தரத் தீர்வை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
·  இந்நிலங்கள் புன்செய்யாக இருந்தால் அவை சாலைகளுக்கும் சந்தைகளுக்கும் அண்மையில் உள்ளதை அனுசரித்து தரத் தீர்வை நிர்ணயிக்கப்படுகிறது. தரத் தீர்வையை அடுத்த நிலவரித் திட்டம் அமலாக்கும் வரை மாற்றப்படுவதில்லை. 
முதல் வகுப்பு:
·  வருடம் முழுவதற்கும் தண்ணீர் கொடுக்க கூடியதை நிரந்தர பாசன ஆதாரங்கள் என்கிறோம். (வைகை, காவிரி) 
2-ஆம் வகுப்பு:
·  8 மாதம் முதல் 10 மாதங்கள் வரை சாகுபடிக்கு நீர் கொடுக்கக் கூடியது.(பெரிய ஏரிகள்) 
3-ஆம் வகுப்பு:
·  5 முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் கொடுக்கக் கூடியவை. 

4-ஆம் வகுப்பு:
·  3 முதல் 5 மாதங்கள் வரை தண்ணீர் கொடுக்கக் கூடியவை.(சிறிய ஏரிகள்) 
5-ஆம் வகுப்பு:
·  3 மாதங்களுக்குக் குறைவாக தண்ணீர் கொடுக்கக் கூடியவை(குளம், குட்டைகள்) 
ஆயக்கட்டு
·  ஒரு பாசன ஆதாரத்திலிருந்து சாகுபடிக்கு நீர் பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட நிலங்கள் ஆயக்கட்டு நிலங்கள் எனப்படும். 
கூட்டு ஆயக்கட்டு
·  ஓன்றுக்கு மேற்பட்ட இரு பாசன ஆதாரங்களிருந்து பாசனம் பெற பதிவு செய்யப்பட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு கூட்டு ஆயக்கட்டு என்று பெயர். 
புறம்போக்கு கிணறுகள்
·  இவைகளில் ஒவ்வொன்றூக்கும் 3 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு இருக்குமானா இதுபோன்ற கிணறுகளை பாசன ஆதாரங்களாக பதிவு செய்து ஆயக்கட்டு நிலங்களுக்குரிய தீர்வை விதிக்கப்படும். 
துறவு கிணறுகள்
·  ஆறு,வாய்க்கால் மற்றும் ஓடைக் கரையில் திறந்த அல்லது மூடிய வாய்க்காலின் மூலம் இணைத்துக் கட்டப்பட்ட கிணறுகளுக்கு துறவு கிணறுகள் துறவுக் கிணறுகள் என்று பெயர். இதன் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர்த் தீர்வை விதிக்க வேண்டும். 
இசா ஏரி
·  ஒரு வருவாய் கிராமத்தில் ஏரி அமைந்திருந்து ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்களுக்குத் தண்ணீர் தரும் ஏரி. 
பசலி ஜாஸ்தி
·  ஒரு போக நன்செய் நிலங்களாக பதிவு செய்யப்பட்ட நன்செய் நிலங்களில் இரண்டாம் போகத்திற்குத் தண்ணீர், அரசுப் பாசன ஆதாரத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுச் சாகுபடி செய்யப்படுமானால் அதற்கு விதிக்கப்படும் தண்ணீர்த் தீர்வை பசலி ஜாஸ்தி எனப்படும். 
தீர்வை ஜாஸ்தி
·  ஆயக்கட்டில் சேர்க்கப்படாத புன்செய் மானாவாரி மற்றும் புறம்போக்கு நிலங்களில், அரசு பாசன ஆதாரங்களில் இருந்து நீர் எடுத்துக் கொள்ளப்பட்டு சாகுபடி செய்யப்படுமானால் அதற்குண்டான தண்ணீர் தீர்வை, ‘தீர்வை ஜாஸ்தி’ எனப்படும்.
பயிர் விபரம்
தண்ணீர் தீர்வை வீதம் (ஒரு ஏக்கருக்கு)
1-ம் வகுப்பு ரூ.
2-ம் வகுப்பு ரூ.
3-ம் வகுப்பு ரூ.
4-ம் வகுப்பு ரூ.
5-ம் வகுப்பு ரூ.
(அ) 10 மாத காலத்திற்கு மேல் நிலத்தில் இருக்கும் பயிர்கள்
28.00
-
-
-
-
(ஆ) 6 மாதத்திற்கு மேல் 10 மாதத்திற்குள் பூமியில் உள்ள பயிர்கள்
24.00
-
-
-
-
(இ) மற்ற பயிர்கள்.
1-ம் போகப் பயிர்
16.00
14.00
10.00
8.00
6.00
2-ம் போகப் பயிர்
8.00
7.00
5.00
4.00
3.00
3-ம் போகப் பயிர்
4.00
-
-
-
-
(அரசு ஆணை நிலை எண் 1303, வருவாய்த் துறை நாள் : 7-8-1984 மற்றும் அரசு ஆணை நிலை எண் 1668, வருவாய்த் துறை நாள்: 6 – 11 -1987) 
பசலி ஜாஸ்தி விதிப்பதின் நிபந்தனை
·  ஒரு பசலியில் சாகுபடி செய்யப்பட்டு அப்பசலியிலேயே அறுவடை செய்தால் ½ மடங்கு நன்செய் தீர்வை விதிக்க வேண்டும்.
·  இரு பசலிப் பயிர் ஒரு பசலியில் பயிரிடப்பட்டு அடுத்த பசலியில் அறுவடை செய்யப்பட்டால் தீர்வை விதிக்க வேண்டிய முறைகள்: (பசலி ஜீன் – ஜீலை) 
பயிர் விபரம் மற்றும் தீர்வை
·  இரு பசலியிலும் நீர்ப்பாய்ச்சும் பயிர்கள் விளைவிக்கப்பட்டால்
·  தீர்வை: ஒவ்வொரு பசலியிலும் ஒரு போக நன்செய் தீர்வை விதிக்க வேண்டும்
·  இருபசலி பயிருக்கு முன்/பின் வேறொரு நீர்ப்பாசன பயிர் சாகுபடி செய்தால்
·  தீர்வை: முதல் பசலியின் ஒரு போக நன்செய் தீர்வையும் இரண்டாவது பசலியில் 11/2 மடங்கு தீர்வையும் விதிக்க வேண்டும்
·  நீர் பாய்ச்சப்பட்ட வேறு இரண்டு பயிர்கள் இரு பசலி பயிருக்கு முன்னர் / பின்னர் என்றும் சாகுபடி செய்தால்
·  தீர்வை: முதல் பசலியின் ஒரு போக நன்செய் தீர்வை, இரண்டாவது பசலியில் இருமடங்கு தீர்வை விதிக்க வேண்டும்.
·  இரு பசலி பயிர் இரண்டோ அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆண்டுகளில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டால்
·  தீர்வை : ஒவ்வொரு பசலியிலும் ஒன்றரை மடங்கு நன்செய் தீர்வை விதிக்க வேண்டும் 
சொந்தக் கிணறுகள் மூலம் நன்செய் நிலம் நீர்ப்பாசனம் செய்யப்பட்டால்:
·  பயிர் விபரம் மற்றும் தீர்வை
·  ஒரு போக நன்செய் நிலத்தில் முதல் போகம் அரசு பாசன நீர், இரண்டாவது போகம் கிணறு மூலம் பாசனம் செய்தால்
·  தீர்வை: ஒரு நன்செய்த் தீர்வை விதிக்க வேண்டும்.
·  முதல் போகம் கிணறு மூலம் 2-ஆவது போகம் அரசு நீர்ப்பாசனம் செய்தல்
·  தீர்வை: ஒரு நன்செய்த் தீர்வை விதிக்க வேண்டும்.
·  நீர் பாய்ச்சப்பட்ட வேறு இரு பயிர்கள் இரு பசலிப் பயிருக்கு முன்னர் ஒன்றும் பின்னர் ஒன்றும், சாகுபடி செய்தால்
·  தீர்வை: முதல் பசலியில் ஒரு போக நன்செய் தீர்வை, இரண்டாவது பசலியில் இருமடங்கு தீர்வை விதிக்க வேண்டும்.
·  இரு பசலி பயிர் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஆண்டுகளில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டால்
·  தீர்வை: ஒவ்வொரு பசலியிலும் 11/2மடங்கு நன்செய் தீர்வை விதிக்க வேண்டும்.
·  இருபோக நன்செய் நிலத்தில் – முழுவதுமாக கிணற்று நீர் மட்டுமே பாசனம் செய்யப்பட்டால் ஒரு போக நன்செய் தீர்வை விதிக்க வேண்டும்.
·  இருபோக நன்செய் நிலத்தில் முதல் போகம் அரசு நீர் ஆதாரமும், அடுத்து கிணற்று நீர் ஆதாரமும் பயன்படுத்தினால் முழுத்தீர்வை விதிக்க வேண்டும். மேலும் இருபோகமும் கிணற்று நீர்ப்பாசனம் மேற்கொண்டால் ஒரு போக நன்செய் தீர்வை விதிக்க வேண்டும்.
·  புறம்போக்கு கிணறு மூலம் புன்செய் நிலத்திற்கு பாசனம் மேற்கொண்டால் தீர்வை ஜாஸ்தி விதிக்க வேண்டும். அதே போன்று அரசு நீர்பாசனத்தை பயன்படுத்தினால் தீர்வை ஜாஸ்தி விதிக்க வேண்டும்.
·  சொந்தக் கிணறு மூலம் புன்செய் பாசனம் செய்தால் தண்ணீர் தீர்வை இல்லை.
·  தற்போது : 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு நன்செய், புன்செய் வரிகள் மண்ணின் தரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படாமல் ஒரே மாதிரியாக விதிக்கப்பட்டுள்ளது அவைகள்:
·  நன்செய் – 1 ஏக்கருக்கு ரூ. 5-ம்
·  புன்செய் – 1 ஏக்கருக்கு ரூ 2-ம்
·  ALR (கூடுதல் நிலத் தீர்வை) இது நன்செய்க்கு மட்டுன் விதிக்கப்படும். தற்போது இது நீக்கப்பட்டது
·  AWC(Additional Water Cess) கூடுதல் தண்ணீர் தீர்வை. புன்செய்க்கு மட்டும் விதிக்கப்படும். தற்போது இது நீக்கப்பட்டது.
·  புறம்போக்கு நிலத்திற்கு மட்டும் தற்போது தலவரி, தலமேல்வரி விதிக்கப்படுகிறது மற்ற நிலத்திற்கான தலவரி, தலமேல்வரி முழுவதுமாக நீக்கப்பட்டது. 
முறையற்ற நீர்ப்பாசனம்
·  நிலங்களில் பயிரிடப்படும் பயிருக்கு சம்பந்தப்பட்ட நீர்ப்பாசன ஆதாரத்திலிருந்து அல்லாமல் வேறொரு நீர்ப்பாசன ஆதாரத்திலிருந்து அல்லாமல் வேறொரு நீர்ப்பாசன ஆதாரத்திலிருந்து தண்ணீர் எடுத்து பாசனம் செய்தால் அது முறையற்ற நீர்ப்பாசனம் எனப்படும்ம். (வருவாய் நிலை ஆணை எண் 4 இணைப்பு 1)
·  முறையற்ற நீர்ப்பாசனத்தின் மூலம் உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்டால் அதற்கு சாதாரணத் தண்ணீர் தீர்வை போல் 10 மடங்கு அபராதம் விதிக்கலாம். 
நீர்ப்பாசன ஆதாரங்கள் – கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் :
·  பருவகால் மழை பெய்யத் தொடங்கும் வழக்கமான தேதிக்கு முன்னதாகவே கலங்களை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
·  ஏரிக் கரைகளை கவனமாக சோதித்து துவாரங்கள் மற்றும் இதர சேதங்கள் உள்ளனவா என்று பார்த்து சரிசெய்து வைக்க வேண்டும்.
·  கன மழைக் காலத்தில் நீர்ப்பாசன ஏரிகளை கண்காணித்து அபாயம் நேரிடும் என்ற நிலை தோன்றினால அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
·  பொதுப்பணித் துறையினர் மேற்கண்ட பாதிப்புகளை சரி செய்ய எடுக்கும் பணியில் தம்மால் இயன்றவரை தொழிலாளர்களையும் வேலைக்கு வேண்டிய பொருட்களை சேகரித்துத் தரும் நியாயமான உதவிகளை கிராம நிர்வாக அலுவலர் செய்ய வேண்டும்.
·  குடி மராமத்து செய்ய வேண்டிய பொறுப்பு தற்போது ஊராட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குடி மராமத்து செய்யாமல் அந்த நீர்ப்பாசனம் சரிவர இயங்காமல் இருந்தால் வட்டாட்சியருக்கும் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கும் உடன் அறிக்கை அனுப்ப வேண்டும்.
·  நீர்ப்பாசன ஆதாரத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடிய எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது என்று விவசாயிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
·  கரை உடைப்பு ஏற்பட்டால் உடைப்பு ஏற்பட்ட இடங்களைச் சரி செய்ய தேவையான மரங்கள் தழைகள், மூங்கில் மற்றும் வைக்கோல் ஆகிய பொருட்களை வழங்க கிராமத்தாருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் உத்தரவிடலாம்.
·  ஏரிகளின் பாதுகாப்பிற்கு அவசியமான எல்லா முன்னேற்பாடுகளைச் செய்வதும் பார்த்துக்கொள்வதும் கிராமப் பணியாளர்களின் பொறுப்பாகும்.
·  ஏரியில் தண்ணீர் இல்லாத சமயத்தில் ஆக்கிரமிப்புக்கள் செய்யாதபடி கண்காணிக்க வேண்டும். 
1858-ஆம் ஆண்டு 2-ஆவது சட்டம்(குடிமராமத்துச் சட்டம்) 6-ஆவது
·  பிரிவின் கீழ் அதிகாரமளிக்கப்பட்டபடி கீழ்க்கண்டவை கிராம நிர்வாக அலுவலர்களின் வேலைகளாகும்.
·  கால்வாய்களின் மீதும் ஏரிக்கரைக் கரைகளின் மீதும் ஏற்பட்டுள்ள அரிப்புகள் மற்றும் பள்ளங்களைத் தூர்ப்பது.
·  கரைகளில் சப்பாத்தி கள்ளியோ (அ) கெடுதி செய்யக்கூடிய ஏனைய செடிகளையோ வளர விடாமல் தடுத்தல்.
·  தீங்கு தருபவை நிர்வாகப் பொறியாளர் கருதக் கூடிய மரம், செடி, கொடிகளை ஏரிக்கரையிலிருந்து களைதல்.
·  கால்வாய்களில் சரிந்துவிழும் மண்ணை அப்புறப்படுத்தி நீர் ஓட்டத்தைத் சரி செய்வது.
·  ஏரியின் வாய்க்கால்களை நல்ல நிலையில் வைத்திருத்தல்
·  மதகுகளை மூடுவதையும் திறப்பதையும் கவனமாகக் கையாண்டு, மழைக் காலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது.
·  உடைப்புகளில் வளை கரைகள் கட்டுதல்(Ring Bunds) விவசாய காலங்களில் தேவையான இடங்களில் ஏரிகளை பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


No comments :

Post a Comment