Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்

No comments :
வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்

·  கிராமத்தில் சிறிய வனப்பகுதி அமைந்திருந்தால் அவற்றின் பரப்பளவு எவ்வளவு என்பதை கணக்கீடு செய்ய கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
·  அவற்றில் உள்ள மரங்கள் பற்றியும் அவற்றின் தன்மை பற்றியும் ஓர் அறிக்கை தயாரித்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
·  வனப்பகுதியில் உள்ள மரங்களை ஒரு குடும்பத்திற்கு ஏலம் விடும்போது அதிகபட்சமாக 5 புளிய மரங்கள் (அல்லது) 25 தென்னை மரங்கள் (அல்லது) 50 பனைமரம் என்று 2C அளிக்கலாம்
·  தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மகளிருக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். அரசாணை எண் 705-வருவாய்த் துறை, நாள் 19-06-1992
·  C மரப்பட்டா வழங்கப்படாத மற்ற புறம்போக்கு நிலங்களிலுள்ள மரங்களின் மேல் பலன்களைச் சேகரித்து விற்பனை செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும். 
வருவாய்த் துறைக்குச் சொந்தமான காட்டு நிலங்களை ஏலத்தில் விற்பனை செய்தல்:
·  வனப்பகுதியில் காற்றில் விழுந்து விட்ட மற்றும் பட்டுப்போன மரங்களை அரசு எடுத்து ஏலம் விடலாம் என்று RSO 18-அ பத்தி 1 கூறுகிறது.
·  வனப்பகுதியில் உள்ள மரங்கள் முதலில் நிர்ணயிக்கப் பட வேண்டும். தேவையானால் வனத்துறையுடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
·  வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாக்க வேண்டும். அதன் மூல ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
·  அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டால், அதற்கு கிராம நிர்வாக அலுவலரே பொறுப்பார்.
·  அனுமதியின்றி மரம் வெட்டப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அறிக்கையை வருவாய் ஆய்வாளருக்கு சமர்பிக்க வேண்டும்.
·  மரங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பின் அதன் விவரத்தையும் கைப்பற்றப்பட்ட மரங்களையும் வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
·  2C பட்டா வழங்கப்படாத மரங்களின் மேல் பலனை அனுபவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜீலை மாதம் தகுந்த அறிவிப்பு செய்து ஏலம் நடத்த வேண்டும்.
·  வனப்பகுதியில் பயன் தரும் மரங்களின் மேல் பயன்பாட்டை அனுபவம் செய்ய ஏலம் எடுக்க வேண்டும்.
·  இதனை வசூல் செய்பவர் VAO ஆவார். 
மரத்தின் வகை
மரவரி(ஓர் ஆண்டுக்கு)
புளி, மா, பலா
ரூ.6/-மரம்
தென்னை மரம்
ரூ.8/-
கொய்யா, கறிவேப்பிலை
ரூ.3/-
பனைமரம்
ரூ.1/-

மரங்களை விற்பனை செய்வதின் அடிப்படைக் கூறுகள்:
·  அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் விற்பனை செய்திடலாம்.
·  அரசு புறம்போக்கு நிலத்திலுள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது அவசியமென்று கருதுதல்(ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை வெட்டுதல்)
·  நில ஒப்படை பெற்றவர், மரத்தின் மதிப்பைச் செலுத்த மறுக்கும் போது
·  காற்றில் விழுந்து விட்ட மற்றும் பட்டுப்போன மரங்களை எடுத்து ஏலம் விடலாம்(RSO 18-அ பத்தி 1)
·  இம்மரங்களின் மதிப்பு முதலில் நிர்ணயிக்கப்பட வேண்டும் தேவையானால் வனதுறையை கலந்து ஆலோசிக்கலாம்.
·  மரங்களின் விற்பனைப் படிவம் RSO 18-அ பத்தி 3 இணைப்பு XI(அ)-இல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
·  மரத்தின் மதிப்பு ரூ.500க்குள் இருப்பின் கிராமத்திலும்
·  ரூ.500-1000 ரூபாய்க்குள் இருப்பின் மாவட்ட அரசிதழிலும்
·  ரூ.10,000க்கு மேல் இருப்பின் மாவட்ட அரசிதழிலும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து ஒரு தமிழ் தினசரியிலும் விளம்பரப்படுத்தப்படும்.
·  மரத்தின் மதிப்பு ரூ.1000 வரை ஏலத்தை வட்டாட்சியரும்.
·  மரத்தின் மதிப்பு ரூ.1000க்கு மேல் ரூ.5000வரை கோட்டாட்சியரும்.
·  மரத்தின் மதிப்பு ரூ.5000க்கு மேல் மாவட்ட ஆட்சியரும் உறுதிப்படுத்தலாம் (RSO 18-அ பத்தி 5) 
மரங்களுக்கான சீனியரேஜ் மதிப்புகள்:
·  முதல் வகுப்பு மரங்களுக்கான மதிப்பு, 1.க.மீட்டருக்கு ரூ.400. (கருவாகை, கருப்பு குங்கிலியம், பூவரசு, சிரு, வேம்பு, கருமதை, மார்லி, அகில்(அ) தேவகொன்னை, சடாட்சி மரங்கள் ஆகும். இவை ரூ.400க்கு ஒரு கன மீட்டருக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
·  இரண்டாம் வகுப்பு மரங்கள் 1, கன மீட்டருக்கு ரூ.200 (கருவேலம், கருங்காலி, காட்டுவாகை, மஞ்சக் கடம்பை, நாமை, நாகை, பலா, வெள்ளை மருதை, மல்லாடி, கள்ளியாச்சா, பிள்ளை மருது, உசிலை, வெள்வேலம், புளி, மா இலுப்பை)
·  மூன்றாம் வகுப்பு மரங்கள் கன மீட்டருக்கு ரூ.100(கொன்றை, புங்கம்).
·  இதர மரங்கள்:
1.
பனை ஒரு மரத்தின் விலை = ரூ. 105
2.
தென்னை ஒரு மரத்தின் விலை = ரூ. 90
3.
விறகு ஒரு மெட்ரிக் டன் = ரூ. 45
4.
அடுப்புக்கரி ஒரு மெட்ரிக் டன் = ரூ.40
(
அரசாணை எண் 993 வனம் மற்றும் மீன் துறை சட்டம் நாள் 10.10.1983). 
மரங்களைப் பாதுகாப்பதில் கிராம நிர்வாக அலுவலர் செய்ய வேண்டிய பணிகள்:
·  பயிராய்வு செய்யும் போது, புறம்போக்கு நிலங்களில் உள்ள அனைத்து மரங்களும் (விடுபட்ட மரங்கள் மற்றும் 2C பட்டா மரங்கள்) நிலையில் உள்ளனவா என்று சரிபார்க்க வேண்டும். இதற்காக அடங்கலின் கலம் 18-இல் புறம்போக்கிலுள்ள அனைத்து வகை மரங்களின் விவரங்களையும் கிராம நிர்வாக அலுவலர் பதிய வேண்டும்.
·  ஏதேனும் மரங்கள் சாய்ந்திருந்தாலோ அல்லது காற்று அடித்து விழுந்திருந்தாலும் வருவாய் ஆய்வாளர் மூலமாக வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
·  புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை எவரேனும் திருட்டுத்தனமாக வெட்டி அப்புறப்படுத்த முயற்சித்தால் அதைத் தடுத்து நிறுத்துவதோடு, வெட்டப்பட்ட மரத்தின் அனைத்து பாகங்களையும் கைப்பற்றி அறிக்கையை வருவாய் ஆய்வாளர் மூலமாக அனுப்ப வேண்டும்.
·  திருட்டுத்தனமாக மரத்தை வெட்டியவரிடமிருந்து வட்டாட்சியர் / வருவாய்க் கோட்ட அலுவலர் பிறப்பித்த மர மதிப்புத் தொகையைக் கண்டிப்பாக வசூலிக்க வேண்டும்.
·  விடுபட்ட மரங்களை ஒவ்வோர் ஆண்டிலும் மேல் பலனை அனுபவித்தல் குறித்து ஏலம் நடத்த தகுந்த நோட்டீஸை வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற்று கிராமத்தில் அறிவிப்பு செய்ய வேண்டும்.
·  ஏலம் விடப்பட்ட மரங்களின் துண்டுகள் ஏலதாரர் எடுத்துச் செல்லும்போது கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கலாம்.
·  2C மரங்களைப் பொறுத்தவரை ஏதாவது குறைபாடு/தவறுதல் இருப்பின், அதன் விவரத்தை உடன் வருவாய் ஆய்வாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.


No comments :

Post a Comment