Nellai Pasanga :-)

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

விழாக்கள் மற்றும் பொது அரசு விழாக்களின் போது கிராம நிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்

No comments :
விழாக்கள் மற்றும் பொது அரசு விழாக்களின் போது கிராம நிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்:

·  கிராமத்தில் நிகழும் முக்கிய விழாக்களில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கே பரிவட்டம் செய்து மரியாதை செய்வர்.
·  கிராமத்தில் நிகழும் விழாக்களில் கிராம நிர்வாக அலுவலரே சட்டம் ஒழுங்கு கெடாமல் நடைபெற முழு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
·  கிராமத்தில் பொதுமக்களின் அமைதியை பாதுகாக்கும் பொருட்டு அனுசரிக்கும் நடவடிக்கைகளுக்கு காவல் பணி என்று பெயர்.
·  கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம எல்லைக்குட்பட்டுள்ள காவல் நிலைய காவல்துறை அலுவலர்களுக்கு ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து கிராமப் பொதுமக்களின் பொது அமைதி காத்திட பரஸ்பர ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து கொள்வது மிகவும் அவசியம்.
·  கிராம விழாவில் ஏற்படும் சாதிப் பிரிவினர் சண்டை, மதச்சண்டை போன்றவை நடைபெறும் போது கிராம நிர்வாக அலுவலர் நிர்வாகத் துறைக்கு வருவாய் ஆய்வாளர் மூலம் வட்டாட்சியருக்கும் வட்டாட்சியர் கோட்டாட்சியருக்கும், கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கும் தெரிவிக்க வேண்டும்.
·  தேர் திருவிழா, கிறிஸ்துவர் தேவாலய திருவிழா, மசூதிகள் உள்ள பகுதிகளில் அடிக்கடி இந்த நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும். 
கிராம ஊரடங்கு உத்தரவு:
கிராமத்தில் மக்களின் நிலை சீர்குலைந்து சாதிச் சண்டை, மதச்சண்டை நடைபெறும் போது 144-இன் படி ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்து, காவல்துறையினர் காவலாளிகளை வைத்து அமைதி நிகழும் வரை தடை ஆணை 144-ஐ விலக்காமல் வைத்திருப்பார். 
தடை ஆணை 144 பிறப்பிக்கும் போது கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்:
·  இரண்டு சாதி அல்லது மதம் சார்பாக சண்டை நடக்கும் காரணம் அறிந்து அவர்களைப் பற்றி விசாரணை செய்து அவர்கள் பற்றி ஓர் அறிக்கை தயாரிக்க வேண்டும்.
·  இரு தரப்பினரையும் (Peace Meeting) கிராம பிரமுகர் தலைமையிலோ வட்டாட்சியர் முன்னிலையிலோ பேச்சு நடத்தி அமைதி நிலை பாடுபட வேண்டும்.
·  அப்படி அமைதி நிகழாத நிலையில் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதிக் கூட்டம் (Peace Meeting) நடத்தி அமைதி நிலவ பாடுபட வேண்டும்.
·  இரு தரப்பினரும் இந்நிகழ்வின் மூலம் சேரதா நிலையில் – நீதிமன்ற வழக்கிற்கு VAO தூண்ட வேண்டும்.
·  மேலும் பல்வேறு சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைப் பாதுகாக்கும்வண்ணம் VAO நடந்து கொள்ள வேண்டும்.
·  ஆயுதங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். அவை வெடிபொருள் சட்டம் (Explosive Act) மற்றூம் ஆய்தச் சட்டம் (Arms Act) ஆகியவை மூலம் லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளதா எனக் காண வேண்டும்.
·  கொலை, தற்கொலை அசாதாரண மரணம் நேரிடும் போது காவல்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
·  சந்தேகத்திற்கு இடமாக வெளிநாட்டவர் மற்றும் வெளியூரில் இருந்து வந்து புதிய நபர்கள் தங்கியிருந்தால் அவர்களைப் பற்றி அறிய வேண்டும். மேலும் கிராமம் பற்றிய குற்ற அறிக்கையை வட்டாட்சியருக்கும், காவல்துறைக்கும் அனுப்ப வேண்டும். 
குற்றங்கள்
·  கிரிமினல் குற்றங்கள் நடைபெறும்போது
·  தற்செயலாக மரணம் ஏற்படும் போது
·  தற்கொலையின் போதும்
·  தீப்பற்றும் சம்பவத்தின் போது
·  K.D. ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம்
·  தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம்
·  இனக்கலவரங்கள் ஏற்படும் போது
·  கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போதைப் பொருள் நடமாட்டம்
·  ஆயுதத்தினால் ஏற்படும் பிரச்சனை போன்ற நிகழ்வுகள் ஏதும் ஏற்படாவண்ணம் கிராம நிர்வாக அலுவலர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 
கிராமப் பொது விழாவின் போது VAO-வின் பங்கு :
·  கிராமங்களில் நலத்திட்டங்களை முழுவதுமாக VAO செயல்படுத்துகிறார்கள். இவர்கள் மூலம் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் மற்ற திட்டங்களும் செயல்படுகிறது.
·  மக்கள் கூட்டத்தை மாவட்டாட்சியர் முன்னிலையில் நடத்தி கிராம மக்களின் நல அரசு திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் பயனடையுமாறு செய்ய வேண்டும்.
·  VAO இவ்விழா மூலம் அனைத்துக் குறைகளையும் கேட்டு உடனே நிவர்த்தி செய்து விடுவார்.


No comments :

Post a Comment